ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், ப்யூல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப்எப்ஐ என்னும் புதிய பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஜிக்ஸெர் எஸ்எப் எப்ஐ, சுஸுகியின் மோட்டோஜிபி எஸ்எப் எடிசனில் மட்டுமே கிடைக்கும். உருவத்தில் மோட்டோஜிபி எஸ்எப் எடிசனை ஒத்திருக்கும் ஜிக்ஸெர் எஸ்எப் எப்ஐயின் முன்பக்க ஃபேரிங்கின் இடது பக்கத்தில் எப்ஐ பேட்ஜ் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு தற்போது அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் குறிப்பிட்ட டீலர்களிடம் மட்டுமே கிடைக்கும். இந்த டீலர்களிடம் ரூ. 5000 செலுத்தி, இதனை ப்ரீ புக்கிங் செய்து கொள்ளலாம். இதன் எக்ஸ்-ஷோரூம் டெல்லி விலை - ரூ. 99262.
புதிய சிறப்பு பதிப்பு மாடல்கள்
தனது ஜிக்ஸெர் பைக்கின் இரண்டு புதிய சிறப்பு பதிப்பு மாடல்களையும் சுஸூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி, ஜிக்ஸெர் எஸ்எஃப் எஸ்பி எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல்கள் ரேஸ் பைக்குகளை ஒத்த கிராபிக்ஸுடனும், ப்ரத்யோக ரியர் டிஸ்க் பிரேக்குடனும் வெளிவந்திருக்கிறது.
மேலும் இதன் மரூன் வண்ண இருக்கையும், க்ளியர் லென்ஸ் எல்இடி பின்புற விளக்குகளும் சிறப்பான தோற்றத்தை தரும். மேட் ஃபைபிராய்ன் கிரே மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய இருவண்ணங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த சிறப்பு பதிப்புகள் முறையே ரூ. 80726 மற்றும் ரூ. 88857 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி மாணவா் உயிரிழப்பு

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

கருத்துக் கணிப்புகள் பாஜகவால் நடத்தப்படுகிறது! திரிணமூல் 226 தொகுதிகளில் வெல்லும் - மமதா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


